
நடிகர் மம்முட்டி விடுத்த 'மை ட்ரீ சேலஞ்ச்'-ஐ நடிகர் சூர்யா ஏற்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை சூர்யா பதிவேற்றியுள்ளார்.
கடந்த மாதம் இணையத்தில் பிரபலமான ஏ.எல்.எஸ் ஐஸ் பக்கெட் சவாலைப் போல,
மலையாள நட்சத்திரம் மம்முட்டி, 'மை ட்ரீ சேலஞ்ச்' என்ற புதுவகையான சவால்
ஒன்றை துவக்கினார். மரம் நட்டு நம் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற
நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சவாலை செய்ய, ஷாரூக் கான், விஜய்,
சூர்யா ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இம்மூவரில், தற்போது, தமிழ் நடிகர் சூர்யா, மம்முட்டியின் சவாலை ஏற்று, தன்
பங்கிற்கு மரம் ஒன்றை நட்டுள்ளார். இது குறித்து வீடியோ பதிவில் பேசியுள்ள
சூர்யா, ""மம்மூட்டி சார். உங்களுடைய MyTreeChallenge-யை சந்தோஷத்தோடு
ஏற்கிறேன். அமீர்கான், சுதீப் மற்றும் என்னுடைய நண்பர் மகேஷ்பாபு
ஆகியோருக்கு சவால் விடுக்கிறேன். அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் என்னுடைய
ரசிகர்களையும் இந்த அற்புதமான நல்ல காரியத்தை செய்ய வேண்டும். நன்றி" என்று
கூறியுள்ளார்.
{ 0 comments... read them below or add one }
Post a Comment