
ராணுவத்தில் சேருவதற்கான படிவத்தில் தனது அம்மா கையெழுத்திடாததால் தன்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை என்றார் நடிகர் அர்ஜுன்.
‘ஜெய்ஹிந்த் 2’ திரைப்படத்தின் இசை வெளீயீட்டு விழா சென்னை யில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, கலைப்புலி எஸ்,தாணு, அர்ஜூன், மனோபாலா மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
படத்தின் இசைத்தட்டை இயக்குநர் பாலா வெளியிட மேஜர் முகுந்தின் மகள் ஆர்ஷியா மற்றும் படத்தில் நடித்துள்ள பேபி யுவினா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அர்ஜுன், “நான் சிறுவயதில் ராணுவ வீரனாக விரும்பினேன். ஆனால் அதற்குரிய படிவத்தில் என் அம்மா கையெழுத்து போடாத தால் ராணுவ வீரனாக முடிய வில்லை” என்றார்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா பேசியதாவது:
இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு முகுந்த் வரத ராஜனின் குடும்பத்தினர் வருகிறார் கள் என்று கேள்விப்பட்டபோதே இதில் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அர்ஜுன் ராணுவத்தில் சேர அவரது வீட்டில் அனுமதிக்கவில்லை என்று கூறினார். அப்படி அவர் சேர்ந்தி ருந்தால் இந்தியாவின் நிஜ ஆக்ஷன் கிங்காக இருந்திருப்பார்.
இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே இருப்பதாக கூறினார்கள். இதுமாதிரி படங்க ளுக்கு மூன்று பாடல்கள்தான் இருக்க வேண்டும். தேசப்பற்று என்கிற முக்கியமான கருத்தை சொல்லும்போது அதிக பாடல் களை வைத்தால் கேலிக் கூத்தாகி விடும். அப்படி ஒரு கமர்ஷியல் படம் எடுப்பதைவிட எடுக்காமல் இருப்பதே நல்லது.
சினிமா துறையினரோடு புகைப் படம் எடுத்துக்கொள்ளவோ, அதை பாதுகாத்து வைக்கவோ நான் ஆசைப்பட்டதில்லை இந்த மேடையில் முகுந்த் வரத ராஜன் குடும்பத்தினரோடு புகைப் படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படு கிறேன். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் மேஜர் முகுந்த னின் தந்தை வரதராஜன் பேசிய தாவது: அர்ஜூனின் ‘ஜென்டில் மேன்’ படத்தை பார்த்து என் மகன் முகுந்த் அவரின் ரசிகரானார். ‘ஜெய்ஹிந்த்’ படத்தை பல தடவை விரும்பி பார்த்திருக்கிறார். இங்கே ‘ஜெய்ஹிந்த் 2’ படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். இப்படி ஒரு தேசப்பற்றுள்ள படத்தை பார்க்க என் மகன் இன்று இல்லையே என்பதில் எனக்கு வருத்தம்தான். இந்த விழாவில் நாங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டது மகிழ்ச்சி’’ என்றார்.